என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்"
- புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன
- பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.
அருமனை :
அருமனை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மஞ்சாலுமூடு முக்கூட்டுக்கல் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே சிவகுமார் (வயது 49) என்பவர் நடத்தும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஏராளமான குட்கா பாக்ெகட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.
- . 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசு
- 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர்.
மார்த்தாண்டம் :
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குட்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி குலசேகரத்தில் நடைபெற்றது.
இதில் மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் பியோனா, ஓவியா முதல் பரிசையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரணா, அர்சித் ரிஸ்வான் இரண்டாம் பரிசையும், 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஸ்டெனி முதல் பரிசையும் வென்றனர். 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசையும், இரட்டையர் பிரிவில் ஹேசல் மெர்சியா-விஸ்மிகா முதல் பரிசையும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரிஜோ முதல் பரிசையும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர். புள்ளிகள் அடிப்படையில் 2-ம் இடத்தை பெற்று சுழற்கேடயத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கலாசன், இணை தாளாளர் பிரான்ஸிஸ், பள்ளி முதல்வர் ஷீலா குமரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
- கல்வி நிறுவனங்களின் தலைவர் நாஞ்சில் வின்சென்ட் வழங்கினார்
- மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டி யாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றனர். இப்போட்டிகளில் குமரி மாவட்ட அளவில் 102 பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வின்ஸ் பள்ளி மாணவர்கள் ரிஷிக், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன், தலைவர் ஜான், பொருளாளர் நவீன், பால்பின், ஷீலன், பிபின், அனீஸ், சஜின் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- மாணவர் பள்ளிக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்.
சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பள்ளிக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பள்ளியின் பொறுப்பாகும். அந்த அலுவலகம் விசாரித்து பின்னர் வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பும். பெற்றோர் அலட்சியத்தால் மாணவர் பள்ளிக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதில் ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2-வது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3-வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும். 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். 20 நாட்கள் வராத பிறகு கல்வித்துறை சட்ட நடவடிக்கையை தொடங்கும்.
- திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.
- சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறை 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
இந்த விடுமுறைக்கு மாற்றாக சனிக்கிழமைகளில் முழு நாளும் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகள் இயங்குகின்றன. அந்த வகையில் நேற்று சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது.
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்ப புதுவை- கடலூர் சாலையில் மாணவ-மாணவிகள் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் திடீரென தனது சைக்கிளில் சாகசம் செய்ய தொடங்கினார்.
பஸ்சுக்கு காத்திருந்த மாணவிகளை கவரும் வகையில் கையை விட்டு ஓட்டுவது, முன் சக்கரத்தை தூக்கி ஓட்டுவது, ஹாண்டில் பாரில் சாய்ந்தபடி செல்வது என கெத்து காட்டினார்.
திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.
ஆனாலும், மிகவும் பரபரப்பான புதுவை - கடலூர் சாலையில் சைக்கிள் சாகம் செய்வது ஆபத்தானது. கெத்து காட்டி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர் மனம் என்னவாகும்?
எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.
இதனிடையே மாணவனின் சைக்கிள் சாகச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பெங்களூருவை சேர்ந்தவர் 13 வயது பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ் ஹரிஷ்.
- இவர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் எம்ஆர்எப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் பெங்களூரைச் சேர்ந்த பைக்கர் ஷ்ரேயாஸ் ஹரிஷ் பங்கேற்றார்.
பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்றது. இதனால், அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கடந்த மே மாதம் மினிஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்று, இரண்டு பந்தயங்களிலும் முறையே 5-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டையில் அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
பள்ளியில் பயின்று வரும் 462 மாணவர்களுக்கு அடையாள அட்டை இல்லை. இதே பள்ளியில் படிக்கும் சகோதரர்களான 8-ம் வகுப்பு பயிலும் விஜய விஜேஷ்குமார், 10-ம் வகுப்பு பயிலும் விஜய விவேஷ்குமார் ஆகியோர் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
இதுகுறித்து தனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விருப்பத்தை தெரிவித்தனர். ஓவியப்போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கேரம் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகளை கொண்டு சுமார் ரூ.10 ஆயிரத்தை சகோதரர்கள் சேமித்தனர்.
சேமித்து வைத்த பணத்தை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தயார் செய்து தாங்கள் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினர்.
மறைந்த சகோதரர்களின் தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி தலைமை ஆசிரியர் பாரி மற்றும் அடையாள அட்டை வழங்கிய மாணவர்களின் தாய் ப்ரீத்தி விஜயகுமார், ஆசிரியர்கள் அடையாள அட்டைகளை வழங்கினர்.
இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம்
- 300-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல எடைப்பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
மாநில அளவிலான சர்வதேச பள்ளிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ போட்டி மதுரை லட்சுமி சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல எடைப்பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் ஆரல்வாய்மொழியில் உள்ள காமரின் சர்வதேச பள்ளியில் இருந்து மாணவன் லோகேஷ் 27 கிலோ எடை பிரிவிலும் மற்றும் மாணவன் ஜேய்ஷ் 35 கிலோ எடை பிரிவிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்று வெள்ளி பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் என்ஜினீயர் லட்சுமணன், மேலாளர் அய்யப்பன், பள்ளியின் முதல்வர் சந்திரலேகா, கன்னியாகுமரி டேக்வாண்டோ அகாடமி தலைவர் விஜயகுமாரி. தலைமை பயிற்சியாளர் கென்னடி மணிராஜ், பயிற்சியாளர் சங்கர்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.
- பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.
- தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
ராயபுரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 39). பஸ் கண்டக்டர். தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் தயானந்த மூர்த்தி (வயது 57). பஸ் டிரைவர். தண்டையார்பேட்டை பஸ் டிப்போவை சேர்ந்த பஸ் நேற்று தடம் எண் 44 கட் பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. வரை செல்லும் பஸ்சில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் ஏறிய 5 பள்ளி மாணவர்கள் பஸ்சில் பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு தொல்லை கொடுத்து ரகளை செய்துள்ளனர்.
பின்னர் பஸ் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் பள்ளி மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் அதில் ஒரு மாணவன் சாலையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து கண்டக்டரை தாக்க முயன்றார். அப்போது கண்டக்டர் அதைத் தடுத்துள்ளார். மேலும், பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கண்டக்டர் தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் எதிரே பஸ்சை நிறுத்தி கண்டக்டர் அதன் முன் நின்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து கண்டக்டர் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
- ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவரிடம் துப்பாக்கியும், அவரது பை மற்றும் டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக பள்ளியில் இருந்து மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.
பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்தது, 15 வயதான மாணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாணவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
பின் ஆயுதங்களை வைத்திருந்தது, பள்ளியில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி மாணவரிடம் இருந்து AR-15 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் செக்கடிப்பட்டி அர்ஜுன தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மகன் விஷ்வா (வயது 17).
நாகராஜன் குடும்பத்துடன் மும்பையில் வேலை செய்து வருகிறார். இதனால் விஷ்வா தனது தாத்தாவான கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.
பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர் பிளஸ்-2 படித்து வந்தார். பெத்தநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள தனது அத்தை மணி வீட்டிலும் தங்கி அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவரது அத்தை வீட்டில் அருகில் வசிக்கும் பெண்ணும் விஷ்வாவும் காதலித்து வந்துள்ளார்கள்.
இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் விஷ்வாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் விஷ்வா செக்கடிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் சேலையில் தூக்கு போட்டுக்கொண்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பேளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஷ்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் விஷ்வா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 15 வயது மாணவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- மாணவரை அவரது தாய் செல்போன் பயன்படுத்த கூடாது என திட்டி உள்ளார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள புதுக்காலனியை சேர்ந்த 15 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவர் பள்ளிக்கு செல்லும் போது அவரது தாய் நன்றாக படிக்க வேண்டும். செல்போன் பயன்படுத்த கூடாது என திட்டி உள்ளார். இதனால் மாணவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவர் அந்த பகுதியில் கடைக்கு சென்று தற்கொலை செய்து கொள்வதற்காக சாம்புவை வாங்கினார். பின்னர் அதனை குடித்தார். பள்ளி அருகே சென்ற போது வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாணவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்